பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி அதிக மக்களால் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்களை விட பெரும்பாலான மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த ‘களவாணி’ பட நாயகி ஓவியா நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சனுக்கு நாமினேட்டாகும் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்படும் அளவிற்கு மக்களிடம், குறிப்பாக இணையதளவாசிகளிடம் நல்ல அபிமானத்தைப் பெற்றிருந்தார் ஓவியா. ஓவியா புரட்சிப் படை, ஓவியா ஆர்மி என்ற குழுக்கள் இப்போதுவரை அவருக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடின் போது கஞ்சாக் கருப்பு மற்றும் ஓவியாவிற்கு இடையேயான வாக்குவாதத்தில் ஓவியா நீங்க ஷட்டப் பண்ணுங்க என்று கஞ்சாகருப்பை பார்த்து கூறுவார். அந்த ‘ஷட்டப் பண்ணுங்க’என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டது திரையுலகம்.
சைனிஷ் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாகவும், அஞ்சலி மற்றும் ஜனனி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்து வரும் படம் பலூன்.
அந்த படத்தில் ஒரு பாடலாக ஷட்டப் பண்ணுங்க என்பது போன்ற ஒரு பாடலை ஓவியாவுக்கு டெடிகேட் செய்யும் விதமாக பலூன்படத்தின் இணைத்திருப்பதாக இயக்குநர் சைனிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “there is a promo song in BaLLOON. and its related to shuttup pannunga. deticaated 2 OVIYA” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
அந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார் என்பதும், ஷட்டப் பண்ணுங்க பாடலை அனிருத் பாடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படத்தின் பாடல் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னபடியே இன்று மாலை ஷட்டப் பண்ணுங்க பாடலின் டீசர் வெளியானதோடு, #ShutUpPannunga என்ற ஹேஷ்டேக் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.