குழந்தைகளை முதலீடாக நினைக்காதீர்கள்! குழந்தைகள் தின சுவாரசியங்கள்…


உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.

எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்களால் கூறப்படும் குழந்தைகளுக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமராகவும், சக்திவாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்த நேரு, குழந்தைகளிடம் அளவிற்க்கு அதிகமான அன்பும், பிரியமும் கொண்டவர்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும்.

குழந்தைகள் தினம் என்றால் என்ன என்பதையே அறியாமல் பல குழந்தைகள் உள்ளனர். இன்றும் பள்ளிக்கு செல்லாமல் தங்களின் உரிமைகளைப் பற்றி அறியாமல் எண்ணற்ற குழந்தைகள் வசித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும், இத்தகைய வழக்குகள் 2015 ஆம் ஆண்டு மட்டும் 34,000 பதிவாகியுள்ளன.

அடிப்படை கல்வி பெற்று குழந்தைகள் முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெறவேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது. உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று.

ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை பரிதாபமாகவே உள்ளது. கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை தொழிலாளர்களாக” உள்ளனர்.

குழந்தைகள் தினம் என்றால் என்ன என்பதையே அறியாமல் பல குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன..

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நாட்டில் நடமாடும் ஒரு சில காம வெறியர்களின் பாலியல் தொல்லையால் சின்ன சின்ன மொட்டுகள் சின்னா பின்னமாகி காணாமல் செல்கின்றனர். இத்தகைய வழக்குகள் 2015 ஆம் ஆண்டு மட்டும் 34,000 பதிவாகியுள்ளன இன்னும் பதிவாகாத வழக்குகள் எத்தனையோ உள்ளது. இனியாவது இம்மாதிரியான மிருகங்களிடமிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படுவார்களா?… ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள்.

(Visited 21 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *