தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

தலைவலி எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுவம் ஒன்று தான். தலைவலி ஆனது பொதுவாக காய்ச்சல், சளி, உடற்சோர்வு, மன அழுத்தம், கணணியில் அதிக நேரத்தை செலவிடுதல் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகின்றது.

ஆனால், சில நேரங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட காணப்படலாம். தலைவலி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு விதமானதாக காணப்படும்.

ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

தலைக்குள் இடி இடிப்பது போன்ற தலைவலி ஒரு நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் அது மூளையில் சிறியதாக இரத்த கசிவு ஏற்பட்டதை உணர்த்துவதாகும். இவ்வாறு அடிக்கடி தலைக்குள் இடி இடிப்பது போன்று இருந்தால் உடனே மருத்துவரின் நாடுவது அவசியம் ஆகும்.

தலைவலி ஒரே மாதிரியாக இருக்காமல், வலி ஏற்ற இறக்கத்தோடு இருந்தால், அவ்வப்போது ஏற்பட்ட குருதி நாள நெளிவு அல்லது ஒற்றை தலைவலியாக இருக்கலாம் என்று அர்த்தம்.

வலி தலையில் இல்லாமல் கண்களுக்குப் பின்புறமாகவோ அல்லது கண்களை சுற்றியோ இருந்தால் உங்களுக்கு சைனஸ் உள்ளதை குறிக்கும்.

நெற்றியின் இரண்டுப் பக்கங்களிலும் வலி அதிகமாக காணப்பட்டால் அது ஏதாவது ஒரு இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக 50 வயதை தாண்டியவர்களுக்கு இது மிகப் பொருந்தும்.

இரவில் தூங்கும் போது மூக்கு எரிச்சல் இருந்தால் அது காலையில் எழுந்திருக்கும் போது தலைவலியை உண்டாக்கும். இந்த தலைவலி சைனஸ் இருப்பதை குறிப்பதாக இருக்கலாம்.

பக்கவாதம், தலைவலி, மயக்கம் மற்றும் தலைச்சுற்று போன்றவை ஒரு மாதத்திற்கு மேலாக காணப்பட்டால் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

(Visited 74 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *