வெளுத்த தோல் உடையவர்களுக்கு வேலை இல்லை: அதிர வைத்த காரணம்

வெளுத்த தோல் மற்றும் தோலில் சுருக்கங்கள் உடையவர்களை கானா நாட்டு குடிவரவுத் துறையினர் பணியில் சேர்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

மிகவும் கடினமான பயிற்சிகளின்போது, அத்தகைய நபர்களுக்கும், அறுவை சிகிச்சை தழும்புகள் உள்ளவர்களுக்கும் ரத்தம் வரலாம் என்பதால் அவர்கள் பணிக்காக தேர்வு செய்யப்படவில்லை என்று அத்துறையின் அதிகாரி மைக்கேல் அமோகா அட்டா தெரிவித்தார்.

இதை நியாயமற்றது என்றும் பாலியல் பாகுபாடு நிறைந்தது என்றும் சிலர் கூறியுள்ளனர். பச்சை குத்தியவர்கள், சுருள் சுருளான சிகையலங்காரம், வளைந்த கால்கள் உடையவர்கள் ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெறும் 500 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 84,000 விண்ணப்பங்களை கானா குடிவரவுத் துறை பெற்றது. அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மருத்துவ மற்றும் முழு உடல் பரிசோதனைகளுக்கு உள்ளாக வேண்டும். தோல் சுருக்கங்கள் உடையவர்கள் கூட பணியில் சேர்வதில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. .

சுமார் 84,000 பேர் தலா 50 ‘செடி’ பணம் செலுத்தி (11 அமெரிக்க டாலர் மதிப்புடையது) விண்ணப்பித்த பிறகு வெறும் 500 பேரை மட்டுமே பணிக்கு எடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டதும் கானா மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் நீதிமன்றத்தை அணுகி விண்ணப்பக் கட்டணத்தைத் திருப்பிக் கோரவேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் காஷிகா வலியுறுத்தியுள்ளார்.

(Visited 38 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *