பெண்கள் உங்கள் ஹேண்ட் பேக்கில் இதை வைத்திருக்காமல் எங்கும் செல்லாதீர்கள்…

கைக்கு அடக்கமான பைக்குள் அவசரத்திற்குத் தேவையான சில பொருட்களை பெண்கள் வைத்துக் கொள்வதற்காகத் தான் ஹேண்ட் பேக் என்ற கைப்பை. ஆனால் இந்த காலத்தில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு தேவையானவற்றை ஹேண்ட் பேக்கில் வைத்திருக்க வேண்டிய மற்றும் வைத்திருக்ககூடாதவை என்ன என்பதை பார்ப்போம்..

வைத்திருக்க வேண்டியவை

ஹேண்ட் பேக்கில் பணம் போன்ற விலை மதிப்புள்ள பொருட்களை பேக்கின் உள்ளறையில் வைப்பது நல்லது.

வெளியில் செல்லும் போது மொபைல் போன் திடீரென்று அணைந்துவிட்டால் சில முக்கியமான நபர்களின் தொடர்பு எண்ணை டைரியில் எழுதி வைத்திருப்பது பாதுகாப்பானது.

சில்லறை, பேனா போன்றவை உங்கள் ஹேண்ட் பேக்கில் வைத்திருப்பது நல்லது. பயணம் செய்யும் இடத்தை பொருத்து தேவையான பழங்கள், கவர் செய்யப்பட்ட கத்தி, பாதுகாப்பு ஸ்ப்ரே எடுத்து செல்லலாம்.

நாப்கின் என்பது எக்காலத்திலும் உங்கள் கைப்பையில் வைத்திருப்பது அவசியம். அதை ஹேண்ட் பேக்கில் பாதுகாப்பான அறையில் வைத்துக் கொள்ளலாம்.

சேப்டி பின், ஹேர்பின்கள், மற்றும் தலைவலி மாத்திரை, தைலம் என்பனவும் தேவைக்கு ஏற்றவாறு வைத்திருக்கலாம்.

நீண்ட நேரம் வெளியில் இருக்க வேண்டி இருந்தால் மறக்காமல் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சார்ஜர், பவர்பேங்கையும் எடுத்துச் செல்லலாம்.

வைத்திருக்க கூடாதவை

கவர் செய்யாத கத்தி, எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் ஆகியவை உங்கள் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

தேவையான சில்லறை மட்டும் எடுத்துச் சென்றால் நல்லது.

பஸ் மற்றும் ரயில் பயணச்சீட்டு, டைரி, தேவையான ரசிது போன்றவை வெகுநாட்கள் இருந்தால் குப்பையாக காட்சியளிக்கும்.

அதிக மேக்கப் சாதனங்களை வைத்திருக்க வேண்டாம். மூடி திறந்து, கொட்டி என வீணாகிவிடும்.

விசிட்டிங் கார்டு கைப்பையிலேயே சேமிக்காமலும், பேனாவை மூடி இல்லாமலும் வைக்க வேண்டாம்.

(Visited 22 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *