கீழே இப்படி வெடிச்சிருக்கா? இனி வெட்டாதீங்க… தொடர்ந்து நான்கு வாரம் இப்படி செய்யுங்கள்

பெரும்பாலும் நம் முடியின் நுனிகளில் ஏற்படும் பிளவுகளை அந்த பகுதியை வெட்டுவதன் மூலம் சரி செய்கிறோம். இந்த முறை உங்களுக்கு அழகான பிளவுகள் இல்லாத கூந்தலை கொடுத்தாலும் ஒரு நிரந்தர தீர்வை நமக்கு கொடுப்பதில்லை.

வெப்பமான ட்ரையர் பயன்படுத்துவது, ப்ரஷ் செய்வது, கலரிங் செய்வது மற்றும் பிற காரணத்தால் இந்த பிளவுகள் ஏற்படுகின்றன.

நீங்கள் என்ன தான் பிளவுகள் உள்ள முடிப்பகுதியை நீக்கினாலும் அதை முழுவதுமாக நீக்க முடியாது.

இதற்கு நீங்கள் விலை உயர்ந்த தரமான ஹேர் மாஸ்க் அல்லது சீரம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நாங்கள் கூறும் எளிதான சில வழிகளைப் பின்பற்றினாலே போதும்.

தேங்காய் எண்ணெய் சிகச்சை

முடி பராமரிப்பு என்றாலே தேங்காய் எண்ணெய் தான் முதல் இடத்தை வகிக்கிறது . ஏனெனில் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.

முதலில் ஷாம்பு போட்டு அலசி, டவலால் உலர்த்திய பின் கூந்தலில் இதை செய்ய வேண்டும்.

ஒரு கையளவில் கால் பங்கு தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதியிலிருந்து நுனி வரை நன்றாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் கூந்தலை ஒரு துண்டை கொண்டோ அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டோ தூக்கி கட்டி நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். ஒரு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்

பிறகு ஷாம்பு போட்டு நன்கு தலையை அலச வேண்டும். (முழுமையாக தேங்காய் எண்ணெயை நீக்க வேண்டாம்). இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கையான தேங்காய் எண்ணெயில் அதிக அடர்த்தி என்பதால் உங்கள் தேவைக்கேற்ப குறைவாகவே அல்லது அதிகமாகவோ முடியின் வேர்ப் பகுதியில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அவகேடா புரோட்டீன் மாஸ்க்

நீங்கள் அவகேடா மாஸ்க் ஒரு இரவு பயன்படுத்தினால் கூட உங்கள் கூந்தல் உங்களுக்கு நன்றி சொல்லும். ஏனெனில் அந்த அளவுக்கு இதன் போஷாக்கு உங்கள் கூந்தலுக்கு தேவை.

ஒரு அவகேடா பழம், ஒரு முட்டை, கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் கலவை போதும் உங்கள் பாதிப்படைந்த முடியை சரி செய்ய.

இதை வீட்டிலேயே எளிதாக தயாரித்து பாதிப்பில்லாத அலைபாயும் கூந்தலை பெறலாம்.

செய்முறை

அவகேடா பழத்தை நன்றாக நசுக்கி ஒரு முட்டையுடன் கலந்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை சேர்த்து கண்டிஷனர் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த கலவையை கூந்தலின் நுனிகள் வரை தடவி 10-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.

இந்த முறைகளில் ஒன்றை தொடர்ந்து நான்கு வாரம் செய்து பாருங்க. நிச்சயம் மாற்றம் உண்டு.

(Visited 23 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *