இலங்கை

3 Videos
1518285493-kilinochchi-L
0

மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்து சில பொது மக்கள் இன்று (10) மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளூர் வீதிகள் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்க கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே தாங்கள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர். (கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)
1415637835409_wps_89_A_bus_is_seen_being_recov
0

40 இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பஸ் தடம்புரண்டு விபத்து

அம்பாறை – கொண்டவட்டவான் இராணுவ முகாமிலிருந்து இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து சவளக்கடை – வேப்பையடி பிரதான வீதியிலுள்ள 15ஆம் கிராமம் கிணற்றடிச் சந்திக்கருகாமையில் நேற்று (9) இடம்பெற்றுள்ளது. சுமார் 40 இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வேப்பையடி நோக்கிச் சென்ற இராணுவ பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்ஸின் ரயர் காற்று […]